Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .
இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது :
கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது .


அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வில்லை . ஆனால் இதற்கு முன்னதாக நடந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப் பட்டது . அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது .




குறிப்பாக முதற் கட்ட தேர் வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்க ளுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் , மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள் ளனர் . இது எப்படி நடந் தது . காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம் , ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது . அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித் தார் . ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள் ளார் . அவர்களுக்கு ஆசி ரியர் பணி வழங்கப்பட் டுள்ளது . அதற்கு பிறகு நடந்த ஆசிரியர் தேர்வுகளில் 3 மணி நேரம் கால அளவு நீட்டிக்கப்பட்டாலும் , 142 மதிப்பெண் பெற்றவ ரைப் போல இது வரை யாராலும் அந்த மதிப் பெண்ணை பெற முடிய வில்லை என்பது தான் வேடிக்கை . அரசுப்பணிக ளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரி யம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது .




இந்நிலையில் , 2013ம் ஆண்டு நடந்த ஆசி ரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற் றும் இது வரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை . ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளனர் . இது போல ஊழல் செய்து உள்ளே நுழைந்த வர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது . இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட் டது . அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை . தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறை கேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற் பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரி யர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ளது .




அதனால் நீதிமன்றம் தானாக முன் வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் . சிபிஐ விசார ணையும் வேண்டும் . அப் படி விசாரித்தால் எங்களி டம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம் .

No comments:

Post a Comment