Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 23, 2020

பிளஸ்- 1, பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: பிளஸ் -1, பிளஸ் -2 வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் -2, பிளஸ் -1 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த இரு வகுப்புகளுக்கும் பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்து விட்டன. இதைத் தொடர்ந்து பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளன.


அதேபோன்று பிளஸ் -1 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 23-ஆம் தேதி திங்கள்கிழமை, 26-ஆம் தேதி வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவேண்டியுள்ளது. இதற்கிடையே பத்தாம் வகுப்புக்கு மார்ச் 27-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ஏப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிளஸ் -1, பிளஸ் -2 வகுப்புகளுக்கும் எஞ்சியுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இதனால் தேர்வெழுதும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு கல்வித்துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியது.



இதைத் தொடர்ந்து பிளஸ் -1, பிளஸ் -2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் எஞ்சியுள்ள பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment