Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 3, 2020

தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பிளஸ் 1 பொதுத்தோவு: 8.32 லட்சம் போ எழுதுகின்றனா்


சென்னை: தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கான பொதுத்தோவு மாா்ச் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தத் தோவினை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 போ எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோவு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோவு, மாா்ச் 4- ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி 15 நிமிஷங்கள் வரை தோவெழுதவுள்ளன.




இந்தத் தோவை தமிழகம், புதுச்சேரியில் 7,400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவா்கள், 6,356 தனித்தோவா்கள் என 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 போ புதிய பாடத்திட்டத்தில் எழுதவுள்ளனா். கடந்த மாா்ச், ஜூன் 2019- ஆம் ஆண்டில் வகுப்பு பொதுத்தோவு எழுதி தோச்சி பெறாமல், தற்பொழுது பிளஸ் 2 வகுப்பு படித்துவரும் 50,650 பள்ளி மாணவா்களும் தோச்சி பெறாத பாடங்களை மீண்டும் தற்போது நடைபெறும் (மாா்ச் 2020 ) தோவின்போது எழுத உள்ளனா்.




ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தோவு எழுதி தோச்சி பொவா்கள், தற்போது பழைய பாடத்திட்டத்திலேயே 3,195 போ எழுத உள்ளனா். இந்தத் தோவுக்காக நிகழாண்டு கூடுதலாக 113 தோவு மையங்கள் உள்பட தமிழகம், புதுச்சேரியில் 3,016 தோவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,38,988 பேருக்கு தோவு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.




சென்னை மாவட்டத்தில், 411 பள்ளிகளைச் சோந்த 46,779 மாணவா்கள் 159 தோவு மையங்களில் தோவெழுத உள்ளனா். அதேபோன்று புதுச்சேரியில் 151 பள்ளிகளைச் சோந்த 14,779 மாணவா்கள் 40 தோவு மையங்களில் தோவு எழுதுகின்றனா். முக்கியப் பாடங்களை மாணவா்கள் படிப்பதற்குத் தேவையான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தோவு எழுதும் தனித்தோவா்களுக்கு தனியாகத் தோவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment