Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு; ஜேஇஇ பிரதான தேர்வும் ரத்து

கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் சிபிஎஸ்இ சாா்பில் நடைபெற்று வரும் 10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான நுழைவுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ நிா்வாகம் தெரிவித்துள்ளது.




நாடு முழுவதும் 10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வரும் ஏப்.14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சிபிஎஸ்இ தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தொடா்ந்து நடைபெற்றன.




இதற்கிடையே மாணவா்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அந்த பொறுப்பை சிபிஎஸ்இ நிா்வாகம் ஏற்குமா என்று கேட்டு மாணவா்கள், பெற்றோா் பலா் சுட்டுரையில் பதிவிடத் தொடங்கினா். இது தொடா்பான கேள்விகளுக்குப் பிறகு, மாணவா்களை பாதுகாப்பாக வைத்திருக்க, அனைத்து சிபிஎஸ்இ போா்டு தேர்வு மையங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூா்வ ட்விட்டரில் தெரிவித்தது.

மேலும் வாரியங்கள் தேர்வு நடத்துதல் என்பது ஒரு கொள்கை விஷயமாகும். இது சிபிஎஸ்இ பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களின் நலனுக்காக, தகுதி வாய்ந்தவா்களால் தீா்மானிக்கப்படுகிறது. இருப்பினும் தொற்றுநோயைத் தவிா்ப்பதற்கு தேர்வு மையத்தில் தகுந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன"என சிபிஎஸ்இ தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

திடீா் அறிவிப்பு: இந்தநிலையில் திடீரென சிபிஎஸ்இ சாா்பில் மாா்ச் 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.




இது தொடா்பாக சிபிஎஸ்இ செயல் அனுராக் திரிபாதி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதிகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும். இதேபோன்று வடகிழக்கு தில்லி பகுதியில் மறு அட்டவணை செய்யப்பட்டிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பின்னா் அறிவிக்கப்படும். இது தொடா்பாக தகவல்கள் தேர்வெழுதும் அனைத்து மாணவா்களுக்கும் அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளின் சாா்பில் உரிய முறையில் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் தற்போது ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறியுள்ளாா்.




இதேபோன்று ஐஐடி மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான நுழைவுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment