Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை

புதுச்சேரி:'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் ' என, புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து, சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.


தற்போதைய சூழலில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வாகும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் தான் மருத்துவம், பொறியியல் போன்ற மேற்படிப்புகளுக்கு அடிப்படையாக உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு தமிழக அரசிடம் பேசி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment