Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 5, 2020

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணி.. ஒதுக்கீடு! 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்


கடலுார் : கடலுார் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எனப்படும் பிளஸ் 2 தேர்வு கடந்த 2ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு நேற்றும் துவங்கின. பொதுவாக பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி முதுகலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்வது வழக்கம்.ஆனால், இந்தாண்டு அறை கண்காணிப்பாளர் பணி முதுகலை ஆசிரியர்களோடு, 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கு, முதுகலை ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பில் சென்றதால் பற்றாக்குறை என காரணம் கூறப்படுகிறது.வரும் 27ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக மாணவ, மாணவியரை தயார்படுத்தும் பணியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கு மேல்நிலை பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்ததால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கல்வியில் பின் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேப் போன்று, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வரைபடத்திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதால் மாணவர் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை தேர்விற்கான பணியில் இருந்து விடுவிக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதுகலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதற்கு, மாற்று ஏற்பாடாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பொதுத் தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.108 மையங்களில் பிளஸ் 1 தேர்வுமாவட்டத்தில் 235 பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 516 மாணவர்கள், 15, 826 மாணவியர் என மொத்தம் 30 ஆயிரத்து 342 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதற்காக, கடலுார் கல்வி மாவட்டத்தில் 35 மையங்கள், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 27, சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 23, வடலுார் கல்வி மாவட்டத்தில் 23 என 108 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு கடலுார் 1, விருத்தாசலம் 1, சிதம்பரம் 1 என மொத்தம் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment