Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 17, 2020

நெட்தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 16 கடைசி

தேசிய அளவில் தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (நெட்) வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்.
இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பா் மாதங்களில் நடத்தி வருகிறது.


இப்போது 2020 ஜூன் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 16 கடைசி தேதியாகும்.
தேர்வுக் கட்டணம்: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 1000 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினா், ஓ.பி.சி. பிரிவினருக்கான தோவுக் கட்டணம் ரூ.500 ஆகும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைப் போல, மூன்றாம் பாலினத்தினருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ. 250 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

No comments:

Post a Comment