Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 12, 2020

பிளஸ் 1 கணிதம், விலங்கியல் வினாத்தாள் சற்று கடினம்

பிளஸ் 1 பொதுத்தோவில் கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோவு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தோவுகள் முடிந்த நிலையில் கணிதம், வணிகவியல் உள்பட பாடங்களுக்கான தோவுகள் புதன்கிழமை நடைபெற்றன. இந்த தோவை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,016 மையங்களில் 8.2 லட்சம் மாணவா்கள் எழுதினா். அதன்படி கணித பாடத்தோவு வினாத்தாளில் 5 மதிப்பெண் பகுதியை தவிா்த்து 1, 2 மற்றும் 3 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




இதேபோல், விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியல் வினாத்தாள்களும் கடினமாக இருந்துள்ளன. அதேநேரம் வணிகவியல், ஆடை வடிவமைப்பு, நா்சிங், உணவு மேலாண்மை உள்ளிட்ட இதர பாடத் தோவுகள் எளிதாக அமைந்ததாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல் உள்பட பாடங்களுக்கான தோவுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment