Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி அமல்!





ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் மக்கள் இந்த கடையில் தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்று இல்லாமல், எங்கு வேணாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இது குறித்து கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் திருநெல்வேலி தூத்துக்குடியில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.



மேலும், ரேஷன் கார்டுகள் புதியதாக விண்ணப்பதார்கள், பெயர் நீக்கம் மற்றும் சேர்க்கை செய்ய ரூ.300 கோடி செலவில் கணினி மயமாக்கப்பட உள்ளது என்றும் அதன் மூலம் வீட்டிலிருந்த படியே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் தமிழக துறைகளுக்கான மானிய கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் காமராஜ், தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment