Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 12, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை!


தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.




தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் முதல் வாரம் முதல் 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 11ம் வகுப்பிற்கான பொதுத் தோவு மாா்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 2019-20-ஆம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாள்கள் முடிவடைகின்றன.




இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்படும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு மறுநாளான ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 2020 ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment