Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

நாடு முழுக்க மொத்தமாக முடக்கம்.. 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும்.. எதெல்லாம் செயல்படாது?

நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: நாடு முழுக்க இன்று இரவில் இருந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.



இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று இரவில் இருந்து 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
விவரம்
என்ன விவரம்

பிரதமர் மோடி தனது பேச்சில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதோடு இதுவும் சுய ஊரடங்கு போலத்தான், ஆனால் அதை விட தீவிரமாக இப்போது கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு எதெல்லாம் செயல்படும், எதெல்லாம் செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.



இயங்காது
ரயில்கள் இயங்காது

இந்தியாவில் ஏற்கனவே ரயில்கள், மின்சார ரயில்கள் உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது. 30 மாநிலங்களில் ஏற்கனவே லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் முதல மாநிலமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயங்காது.

செல்ல முடியாது
யாரும் வாகனத்தில் செல்ல முடியாது

தனியாரும் தங்கள் சொந்த வாகனத்தில் எங்கும் செல்ல முடியாது. இதனால் போக்குவரத்து மொத்தமாக முடங்கும். அதேபோல் ஏற்கனவே அறிவித்த தடைகளின் படி பள்ளிகள், கல்லூரிகள், தனியார், அரசு நிறுவனங்கள், மதுபானகடைகள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள், சந்தைகள் மொத்தமாக செயல்படாது. மொத்தம் 21 நாட்களுக்கு யாரும் வெளியே வர முடியாது.




யாருக்கு பொருந்தாது
யாருக்கு எல்லாம் பொருந்தாது

இந்த தடை ராணுவம், போலீஸ், மருத்துவர்கள், மத்திய நிதி அமைச்சகம், பேரிடர் மீட்பு குழு, மின்சார துறைக்கு, சுகாதாரத்துறை பொருந்தாது. மருத்துவமனை, மருத்துவமனை உற்பத்தி சார்ந்து துறைகளுக்கு தடை கிடையாது. ஆம்புலன்ஸ்கள் இயங்கும். பிரதமர் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை
மருத்துவமனை இயங்கும்

அதனால் மருத்துவமனைகள் இயங்கும், மெடிக்கல்கள் இயங்கும், மிக குறைந்த எண்ணிக்கையில் காய்கறி, பால், மீன், கறி, மளிகை கடைகள் இயங்கும் (சுய ஊரடங்கின் போது இயங்கியது போல), இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டோர் டெலிவரி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம்கள் இயங்கும். அதேபோல் ஊடகத்துறை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். என்று கூறப்பட்டுள்ளது.




ஐடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்
ஹோட்டல்கள்

ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் பங்குகள் இயங்கும். தனியார் பாதுகாவலர்கள் பணிக்கு செல்லலாம். அவசியமான உற்பத்தி துறைகள் தொடர்ந்து செயல்படும். அனுமதியோடு வெகு சில தங்கும் விடுதிக்குள், அனைத்து பிஜிக்கள் இயங்கும். ஆனால் அங்கு தங்கு நபர்களை கண்காணிக்க, சோதிக்க வேண்டும். அனைத்து விதமான நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், ஒன்று கூடுதல் எல்லாம் தடை செய்யப்படுகிறது

No comments:

Post a Comment