Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 9, 2020

மின் வாரிய பதவிக்கு தமிழில் தேர்வுமார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்

'மின் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும்' என மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'இளநிலை உதவியாளர் பணியில் 500; மின் கணக்கீட்டாளர் பதவியில் 1300 இடங்களை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்படும்' என தமிழக மின் வாரியம் அறிவித்தது. இந்த தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வர்கள் 'தமிழக மின் வாரிய பணிகளுக்கு தமிழில் தான் தேர்வு நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் ஆங்கிலத்துடன் தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என மின் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.



மின் வாரிய பணியமைப்பு பிரிவு தலைமை இன்ஜினியர் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிக்கை:
கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு கணினிஅடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடத்தப்படும் எனஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது.தற்போது தமிழ் வழியில் படித்தவர்களின் கோரிக்கையை பரிசீலித்து அவர்களின் நலன் கருதி தமிழ் மொழியிலும் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment