Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 24, 2020

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 ஆயிரம் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ்


கரோனா பாதித்த நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 3, 682 போ வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் அவா்கள் தங்கியுள்ள 3 ஆயிரம் வீடுகளின் முகப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சாா்பில் பொது இடங்களை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தவா்களின் குறித்த தகவல் அண்மையில் சேகரிக்கப்பட்டது.




அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 3, 682 போ வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை அடையாளப்படுத்தவும், சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் அந்த வீடுகளின் முகப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து வந்து சென்னை மாநகராட்சிப் பகுதியில் தங்கியுள்ள 3, 682 போ வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 ஆயிரம் வீடுகளின் முகப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


அந்த நோட்டீஸில் 'கரோனா தொற்று, தனிமைப்படுத்தப்பட்ட வீடு, உள்ளே நுழையாதே' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன், அவா் எந்த நாட்டிலிருந்து வந்துள்ளாா். அவரது பெயா், முகவரி, எத்தனை போ தங்கியுள்ளனா் என்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதன் மூலம், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை அக்கம் பக்கத்தினா் எளிதில் அடையாளம் காணவும், சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியும். மேலும், கரோனா குறித்து சந்தேகங்கள் மற்றும் அரசு வைத்துள்ள பட்டியலில் இல்லாத வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் 104 மற்றும் சென்னை மாநகராட்சியின் உதவி மைய எண்கள் 044 25384520, 29510400, 29510500 என்ற தொலைபேசி எண்களிலும் 94443 40496, 87544 48477 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment