Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி !!!


கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதால் ஏப்ரல் 1- ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக் குறியாகஉள்ளது. தமிழகத்தில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் 1 முதல் 8 ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசத்தை போல் தமிழகத்திலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ - மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


சமக்ரசிக்‌ஷா கல்வி சட்டத்தின் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடைய செய்யலாம் என்பதாலும், ஒன்பதாம் வகுப்பிற்கும் சிறப்பு அனுமதியுடன் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு சில நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment