Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 1, 2020

சந்திராஷ்டமம் தினத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யணும்?


பொதுவாக நாம் பேச்சால் ஏதாவது வம்பில் மாட்டிக்கொண்டால் ,நாக்கில் சனி அதான் வாயை கொடுத்து மாட்டிகிட்டேன் என்று புலம்புவது உண்டு. இதில் சனி பகவானுக்கு பங்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் அன்றைக்கு நமது ராசிக்கு சந்திராஷ்டமமாக இருக்கலாம்.



ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சந்திரன் ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
சந்திராஷ்டம தினத்தன்று எந்த முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால்,அன்றைய தினம் மனதின் தன்மை நிலையற்றதாக இருக்கும்.
நம் ராசிக்கான சந்திராஷ்டமம் வரும் நாளை கவனமாக தெரிந்து வைத்துக் கொண்டால், அன்றைய நாளில் கூடுதல் கவனத்துடன், அமைதியாக இருந்து இறை வழிபாடு செய்து கீழ்கண்ட பரிகாரம் செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.



மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.
கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.



துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.
வழிகள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகும்

No comments:

Post a Comment