Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 4, 2020

மணவாழ்க்கை சந்தோஷத்துக்கும் தம்பதியரின் ஜீன்களுக்கும் தொடர்பிருக்கிறதாம்!!


திருமண வாழ்க்கையின் தரத்திற்கும் கணவன்-மனைவியின் ஜீன்களுக்கும தொடர்பு இருப்பதாக அமெரிக்க பிங்கம்படன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் மேட்டிசன் கூறும் போது, "Oxytocin Receptor gene (OXTR) என்பது தான் திருமண வாழ்க்கையின் தரத்தை பெரிதும் தீர்மானிக்கிறது.



இந்த ஜீன்கள் மண வாழ்க்கைக்கான முக்கிய ஹார்மோன்களுடன் தொடர்புடையது. மேலும் இவையே ஒருவரது சமூக நடத்தைக்கும் தொடர்புடையதாகும்.
இந்த ஆய்வு 79 தம்பதிகளிடம் நடத்தப்பட்டது. கணவன், மனைவி தனித்தனியாக சில கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மேலும் தங்களது துணையோ அல்லது அவர்கள் குடும்பத்தாரோ தொடர்பில்லாது அவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்னை குறித்து 10 நிமிடங்கள் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.



அவர்கள் பேசியதில் இருந்து அந்த பிரச்னையில் இருந்து வெளிவர அவர்களது துணை அவருக்கு எப்படி உதவுகிறார் என்பதை கண்டறிந்து பின் அதற்கு பின் உள்ள காரணங்கள் குறித்து அறிந்துக் கொண்டோம். பின் அவர்கள் பதில்களை வைத்து ஜீன்களில் உள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்தோம்" என்றார்.
ஒருவர் தனது ஜீன்களை பொறுத்தே தனது துணைக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment