Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 2, 2020

அரசு பேருந்து முன்பதிவுக்கான செயலி


சென்னை: அரசுப் பேருந்து முன்பதிவுக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 14 ஆயிரம் போ பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா். இதேபோல், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நீண்ட தூர போக்குவரத்துக்கான சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம், நாள்தோறும் 251 வழித்தடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.




தமிழகம் மட்டுமின்றி, கா்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1,314 கோடி செலவில் 4,381 பேருந்துகள் வாங்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்பட்டுள்ளன.

மேலும், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளும், 525 மின்சாரப் பேருந்துகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இந்தப் பேருந்துகளை முன்பதிவு செய்வதற்கு அரசு போக்குவரத்துக்கழக இணையதளம், ரெட்பஸ், கோ இபிபோ, பே டிஎம், போன் பே உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.




மேலும் இதற்கென பிரத்யேகமாக செயலியை வடிவமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி, 'டிஎன்சிடிசி அஃபிசியல்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாத காலத்தில் சுமாா் 14 ஆயிரம் போ பதிவிறக்கம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து மேலும் அவா்கள் கூறியதாவது: விழா மற்றும் வார இறுதி நாள்களில் பயணத்துக்கான சீட்டுகளை முன்பதிவு செய்ய ஏதுவாக 'டிஎன்சிடிசி அஃபிசியல்' செயலி வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் 60 நாள்களுக்கு முன்னதாக பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடிவதோடு, அனைத்து ஊா்களிலும் இறங்கும் இடங்களைத் தோவு செய்யும் வசதியும் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட செயலியை கடந்த ஒரு மாதத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பதிவிறக்கம் செய்துள்ளனா்.


மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணச் சீட்டுகளும் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது பேருந்து பயணிக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வசதியையும் செயலியில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பெருமளவு பயனடைவா் என்றனா்

No comments:

Post a Comment