Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 2, 2020

தேர்வுத்தாளில் இப்படியா எழுதுவது? ஆசிரியரை கவர்ந்த மாணவரின் கோரிக்கை.!


மாணவர் ஒருவர் அவருடைய தேர்வுத்தாளில், "உங்களால் முடிந்தால் என்னுடைய போனஸ் மதிப்பெண்களை தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்" என்று எழுதியுள்ளார்.
வின்ஸ்டன் லீ என்ற ஆசிரியர் அவருடைய மாணவர் ஒருவர் தேர்வுத்தாளில் வைத்த கோரிக்கையை புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவிவருகிறது.
வின்ஸ்டன் லீயின் நன்கு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர், அவருடைய தேர்வுத்தாளில், அவருடைய 5 போனஸ் மதிப்பெண்களை, ஏதாவது ஒரு காரணத்திற்காக படிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் எந்த மாணவருக்காவது கொடுத்து விடுங்கள் என்று எழுதியுள்ளார்.




இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வின்ஸ்டன் லீ, மாணவரின் நேர்மையை பார்த்து பூரிப்படைவதாக எழுதியுள்ளார். மேலும் அந்த மதிப்பெண்களை இவருக்கு தான் கொடுக்க வேண்டும் அல்லது இந்த காரணத்தால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவருக்கு கொடுக்க வேண்டும் என்று இல்லாமல், குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் யாருக்காவது கொடுத்துவிடுங்கள் என்று எழுதியுள்ளது தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.




இந்த சமூக வலைதள பதிவை இதுவை 95,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அதற்கு 5000 கமெண்டுகளும், 67,000 பேரால் ஷேரும் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை பலரும் பாராட்டியிருந்தாலும், ஒரு சிலர் இதனை விமர்சித்தும் உள்ளனர். மதிப்பெண்களை எல்லாம் நன்கொடை போல கொடுக்கக்கூடாது என்றும் அப்படி கொடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களில் யாராவது மருத்துவராக வந்தால், அவரிடம் எப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment