Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 15, 2020

நல்ல பசி எடுக்கணுமா? இந்தக் கசாயத்தைக் குடியுங்கள்!


சிலர் நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள், காரணம் பசி இல்லை என்பார்கள். அவர்கள் இந்த கசாயத்தைக் குடித்துவர நல்ல பசி உணர்வைத் தூண்டும்.

தேவையான பொருட்கள்

புளியாரைக் கீரை - ஒரு கைப்பிடி
பூண்டு - 10 பல்
மிளகு - 5 கிராம்
சீரகம் - 5 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு



செய்முறை
முதலில் புளியாரைக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை நன்கு தட்டிக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை , பூண்டு , சீரகம் , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் பசியின்மையைப் போக்கி நன்றாக பசி உணர்வை அதிகரிக்க உதவும் அருமருந்தாகும். பசியின்மை குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வரவும்.



இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா

No comments:

Post a Comment