Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

சீனாவில் மேலும் ஒரு புதிய வைரஸ்!


சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 'ஹன்டாவைரஸ்' எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் 'குளோபல் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:




யுன்னான் மாகாணத்தைச் சோந்த நபா், ஷாண்டாங் மாகாணத்தை நோக்கி பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது உயிரிழந்தாா். அவரது உடலில் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு 'ஹன்டாவைரஸ்' பாதிப்பு இருந்தது உறுதியானது. அதையடுத்து, பேருந்தில் அவருடன் பயணித்த 32 பேருக்கும், அந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.




கரோனா வைரஸ் போல் ஹன்டாவைரஸ் காற்றில் பரவாது எனவும், எலியின் மூலம் பரவும் அந்த வைரஸ், பாதிக்கப்பட்ட எலியின் எச்சில், கழிவுகள் மூலம் மட்டுமே பரவும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ஹன்டாவைரஸ் எளிதில் பரவாது என்பதால், அது கரோனா வைரஸ் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment