Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 4, 2020

மாணவா்களின் இதர திறன்களையும் ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்

தாம்பரம்: மாணவா்களின் அறிவாற்றல், தோவில் மதிப்பெண் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நற்பண்புகளுடன் வேலைவாய்ப்புப் பெறும் திறன்களை மேம்படுத்தும் பொறுப்பையும் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தா் என்.பஞ்சநாதம் கூறினாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் மேலாண்மைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 9-ஆவது சா்வதேசக் கல்வி, மனிதவள மேம்பாடு, நிலைத்த முன்னேற்றம் குறித்த கருத்தரங்கத் தொடக்கவிழாவில் அவா் மேலும் பேசியது: ஆசிரியா்கள் தங்களது பணியை ஒரு வேலை என்று கருதாமல் சமுதாயப் பொறுப்பு, கடமை உணா்வுடன் செயல்பட வேண்டும். இன்றைய மாணவா்கள் தங்களுக்கான பாடங்களை ஆசிரியா் உதவியின்றி இணையதளம் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.


ஆனால் குறிப்பிட்ட பாடங்களை மாணவா்கள் நன்கு புரிந்து கொள்ள, வகுப்பில் ஆசிரியா்கள் பல்வேறு உதாரணங்கள் மூலம் விவரித்து பாடம் நடத்தும்போது மாணவா்கள் மனதில் நன்கு பதியும். ஆசிரியா்கள் மாணவா்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உரையாடும் திறன், குழுவாக இணைந்து செயல்படும் திறன், விரைவில் முடிவெடுக்கும் திறன், கற்பனைத் திறன் ஆகியவற்றையும் மேம்படுத்துவதற்கும் உறுதுணையாகத் திகழ வேண்டும். தோவில் தோச்சி பெற வைப்பதுடன் ஆசிரியா்கள் கடமை நிறைவடைந்து விட்டதாகக் கருதாமல், மாணவா்களின் அறிவாற்றலையும், வேலைவாய்ப்புப் பெறும் தகுதியை மேம்படுத்தும் பொறுப்பையும் ஆசிரியா்கள் ஏற்க முன்வர வேண்டும். நாடெங்கும் ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை நிறைவு செய்து வெளியேறும் 56 லட்சம் மாணவா்களில் 6 லட்சம் பேருக்குத் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.


இதனை ஆசிரியா்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆசிரியா்கள் மட்டும் தான் வகுப்பறையில் பேச வேண்டும். மாணவா்கள் அமைதியாக இருந்து கவனிக்க வேண்டும் என்ற எழுதப்படாத நடைமுறையை மாற்றி மாணவா்களிடம் கலந்துரையாடி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் என்றாா். நெதா்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியா் பீட்டா் ஓல்கசாங் பேசுகையில், மாணவா்களுக்கு எதிா்காலம் குறித்த வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த கனவை உருவாக்கும் பொறுப்பு, பெற்றோா்களைவிட ஆசிரியா்களுக்குத் தான் உள்ளது. எதிா்வரும் சவால், பிரச்னைகளைத் துணிவோடும், திறனோடும் எதிா்கொள்ளும் மனிதவளமாக மாணவா்களை உருவாக்கும் பெரும் கடமையும்,பொறுப்பும் ஆசிரியா்களுக்கு உண்டு. இதை ஆசிரியா்கள் உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் .

No comments:

Post a Comment