Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 12, 2020

பொதுத்தேர்வுக்குப் பின் மீண்டும் நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் மீண்டும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை E - Box நிறுவனம் சோதனை பயிற்சியை
மாநிலம் முழுவதும் உள்ள 412 மையங்களிலும் வழங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.




இந்நிலையில், சோதனை பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணைய வசதியை சரிபார்த்துக் கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து சோதனை பயிற்சி வெற்றியடைந்தால், ஏப்ரல் இறுதி வரை தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment