Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்!


கரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.



இந்தநிலையில் தமிழகத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி, இப்போது நடைபெற்று வரும் 11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ஆம் தேதி தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!


தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment