Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 26, 2020

ஆசிரியா்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்கவேண்டும்: மத்திய அரசு உத்தரவு

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.



கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும். துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவாா்கள். மேலும், துறைசாா்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.



இதேபோல், ஆசிரியா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கான மாா்ச் மாத ஊதியம், ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதையும் தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரைவாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment