Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 13, 2020

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


சென்னை: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் பொதுப்பணித்துறையின் மூலம் உரிய மதிப்பீடு செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன் : நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தனியார் நிறுவனங்களின் உதவி பெற்று ரூ.482 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


விஜயதரணி : கடந்த 2017ல் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் நியமனத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.செங்கோட்டையன்: உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக ஒரு சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கு போட்ட 23 இடங்களின் நியமனம் நிறுத்தி வைத்து விட்டு, மற்றவர்களை பணியமர்த்தலாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment