Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 9, 2020

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் அறிய வேண்டிய அம்சங்கள்

உயர் கல்விக்கான செலவை சமாளிக்க கல்விக்கடன் உதவுகிறது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் கல்விக்கடன் வசதியை அளிக்கின்றன. மாணவர் கடன் என்றும், இது குறிப்பிடப்படுகிறது. உயர் கல்விக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், கல்விக் கடனுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. கல்விக்கடன் தொடர்பான முக்கிய அம்சங்கள் வருமாறு:யாருக்கு கடன்: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. பெற்றோர், உடன் பிறந்தவர், வாழ்க்கைத் துணை கூட்டு விண்ணப்பதாரராக இருக்கலாம்.


கடன் தொகை, 4 லட்சத்திற்கு மேல் இருக்கும் போது, கூட்டு விண்ணப்பதாரர் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல் இருக்கும் போது ஈட்டுறுதி தேவை.கடன் தொகை: கல்வி கட்டணம் மற்றும் தங்குமிடம் போன்ற கல்வி சாராத செலவுகளுக்கும் சேர்த்து கடன் பெறலாம். கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக தொகை வழங்கப்படும். மற்றக்கடன்கள் போலவே இந்த கடனும் செயல்படுகிறது. படிப்பு முடிந்ததும் மாணவர்கள் மாதத்தவணை செலுத்த துவங்க வேண்டும்.எவ்வளவு தொகை: இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில கடன் வசதியை நாடலாம். கடன் தொகை வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.




கடனை செலுத்த, அதிகபட்சம், 15 ஆண்டு அவகாசம் அளிக்கப்படும். வெளிநாட்டு கல்வி எனில், 1.5 கோடி ரூபாய் வரை பெறலாம்.வட்டி விகிதம்: கல்விக்கடனுக்கு வங்கிகள், 8.5 சதவீதம் முதல், 15 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கலாம். ஒரு சிலவங்கிகள் வட்டியில் சலுகை அளிக்கலாம். செயல்முறை கட்டணம் போன்றவையும் பொருந்தும். நிர்வாக செலவுகளும் விதிக்கப்படலாம். பொதுவாக, கல்விக்கட்டணத்தில், 80 முதல், 90 சதவீதம் வரை அளிக்கப்படலாம்.தேர்வில் கவனம்: கல்வி கடன் பெறும் போது, மதிப்பு மிக்க கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதும், எதிர்கால வேலைவாய்ப்புள்ள படிப்பை தேர்வு செய்வதும் நல்லது. கல்வி கடனானது, மாணவர்கள் பெறும் முதல் கடன் என்பதால் அவர்கள், 'கிரெடிட் ஸ்கோரை' உருவாக்கிகொள்ளவும் உதவும்.

No comments:

Post a Comment