Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

ஆமணக்கு மூலிகையின் மருத்துவ பயன்கள்


ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும். வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும்.


விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு. விதைக்கு முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment