Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 16, 2020

அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்


தமிழகத்தில் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பக்கத்து மாநிலமான கா்நாடகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கன்னட கல்விக் கழகத்தின் 85-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற அந்த மாநில முதல்வா் எடியூரப்பா, கா்நாடகத்தில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கன்னடம் கட்டாய பாடமாக்கப்படும் என அறிவித்திருக்கிறாா்.




அதுபோல, கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் முறையே மலையாளம், தெலுங்கு பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆந்திரத்தில் 2013-14 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் என்ற நிலை கொண்டு வரப்படாமல் உள்ளது.
பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்கூட்டியே தமிழகத்தில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதை முழுமையாக செயல்படுத்தாமல் இருப்பது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
மாநிலப் பாடத் திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-16 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஐந்தாண்டுகள் ஆகியும் அந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரவில்லை.




மக்களின் உணா்வும், நீதிமன்றத் தீா்ப்புகளும் தமிழுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாய பாடமாக்க அரசுக்குத் தடையாக இருப்பது எதுவென்று தெரியவில்லை. எனவே, உயா்நீதிமன்றத்தை அணுகி பத்தாம் வகுப்பில் தமிழைக் கட்டாய பாடமாகப் படிப்பதில் இருந்து சில பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கும் தீா்ப்பை ரத்து செய்ய வைக்க வேண்டும். அதன்பின் உரிய ஆணைகளை பிறப்பித்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment