Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 17, 2020

கொரோனா வைரஸ் மனித உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரை எடுக்கிறது - வெளியாகிய திடுக்கிடும் ரிப்போர்ட்


சமீபகாலமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த பீதி எழுந்துள்ளது. இந்த வேளையில் இந்த வைரஸ் குறித்த பல வதந்திகளும் பரவி வருவதால், அதைக் கண்மூடித்தனமாக நம்பி பயம் கொள்ளாமல், மிகவும் கவனமாகவும் சுகாதாரமாகவும் இருக்க மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கமும் மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் புகுந்த பின் எந்த உடலுறுப்புக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுவோம். COVID-19 ஒரு சுவாச நோய் என்பதால், இது பெரும்பாலான நோயாளிகளின் நுரையீரலைத் தான் முதலில் பாதிக்கிறது. பொதுவாக இது இருமல், தும்மல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.



இந்த நோயின் முதல் அறிகுறி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகும். ஆனால் இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாகும் போது, அது அப்படியே நிமோனியாவாக மாறுகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80% அதிகமானோருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் தீவிர நிலையில் தான், நுரையீரல் திரவங்களால் நிரம்பி வழிந்து, சுவாசிப்பதே கடினமாகி, இறுதியில் மரணத்திற்கு தள்ளி விடுகிறது .
கொரோனா வைரஸ் குடலில் பாதிப்பை உண்டாக்கி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும். பல ஆய்வுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரியை சோதித்ததில், அந்நோயாளிகளுக்கு இரைப்பை குடல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலைத் தாக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் போது, உடலில் அதிகப்படியான கல்லீரல் நொதிகள் உற்பத்தி செய்ய நேடுகிறது. இந்தவேளையில் உங்கள் ரத்த அணுக்கள் மற்றும் தட்டையணுக்களின் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிடும்.



ஒருவருக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், அது திடீர் மாரடைப்பை ஏற்படுத்திவிடும். உடலில் மூளை மற்றும் இதயத்திற்கு அடுத்தப்படியாக மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். உடலிலேயே மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு என்றால் அது கல்லீரல் என்றே கூற வேண்டும். ஒருவரது உடலை கொரோனா வைரஸ் தாக்கினால், அது கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்குமாம்.
சில நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் சிறுநீரகங்களில் தீவிரமான காயங்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இது மிகவும் அரிதானது. ஆயினும், கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை தீவிரமாகும் போது, கட்டாயம் அது சிறுநீரகக் குழாய்களைத் தாக்கி, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, வளர்சிதை மாற்றத்திலும் இடையூறை ஏற்படுத்தும். மேலும் பல உறுப்பு சேதம் மற்றும் அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ் போன்றவை சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment