Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 9, 2020

மூளையின் நலனை பேணுவதற்கு தினமும் ஓடுங்கள்


* ஜூம்போ, ஏரோபிக்ஸ் போன்ற நடன பயிற்சி மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடல் எடையை குறைக்கவும், கட்டுடல் அழகை பராமரிக்கவும், உடல் சோர்வு இன்றி உத்வேகத்துடன் செயல்படவும் உடற்பயிற்சிகள் உதவும்.
* தியானம் செய்வதும் மூளைக்கு புத்துணர்வு அளிக்கும். மன நலன் சார்ந்த அத்தகைய பயிற்சிகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
* சீன தற்காப்பு கலைகளில் ஒன்றான 'தாய்சி' எனும் பயிற்சியும் மூளைக்கு பலம் சேர்க்கும். இந்த பயிற்சிக்கு மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கும் தன்மை இருக்கிறது.


அது மூளையின் அளவை அதிகரிக்கவும் உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
* மூளையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் சைக்கிள் பயிற்சி உதவும். உடல் எடையை குறைக்கவும், உடல் வலு பெறவும் சைக்கிள் ஓட்டுவது சிறந்தது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவி செய்யும். மன அழுத்தத்தை போக்கவும் செய்யும்.
* ஓட்டப்பயிற்சியும் மூளையின் ஆரோக்கியத் துடன் தொடர்புடையது. அது ஹிப்போகேம்பசில் புதிய செல்களை உருவாக்குவதற்கு உதவும். மன அழுத்தத்தை போக்கவும், உடல் எடையை குறைக்கவும் மூளையின் நலனை பேணுவதற்கு தினமும் கொஞ்ச தூரமாவது ஓடுங்கள்.

No comments:

Post a Comment