Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 15, 2020

உடலின் வளர்ச்சிதை மாற்றத்த்திற்கு சீராக உதவும் முந்திரி


சென்னை முந்திரி வளர்ச்சிதை மாற்றத்திற்கு சீராக உதவுகிறது... முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள். இது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம். முந்திரி உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக உதவுகிறது.
முந்திரியில் முந்திரி பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப்பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள கடித்த பூக்காம்பு பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.



முந்திரியில் முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் உண்ணக் கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.
முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள். இது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம். முந்திரி உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக உதவுகிறது. அதனால் நாள் ஒன்றுக்கு 4 முந்திரி வரை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.



தசைப்பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆகியவற்றையும் சரி செய்யும். இதில் கால்சியம் நிறைந் துள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்பு சத்தை உடல் கிரகிக்க இது உதவுகிறது. வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கிறது. எலும்புகள் மற்றும் திசுக்கள் வளர்வதை தூண்டுகிறது.
சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணை புரியும் மெலனின் உற்பத்தி செய்கிறது.மனிதனின் மூளை செல்களை உற்பத்தி செய்வதற்கு, பாலி அன் சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன் சேச்சு ரேட்டட் கொழுப்பு அமிலங்களை நம்பியிருக்கிறது.



முந்திரி மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி இவை சீராக சுரந்து மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் முந்திரி உதவுகிறது.

No comments:

Post a Comment