Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 8, 2020

கீரை தரும் பலன்கள்

* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.
* குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கத்தினை வற்ற வைக்கும்.
* அரைக்கீரை - ஆண்மையைப் பெருக்கும்.
* புளியங்கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.
* பிண்ணாருக்குகீரை - வெட்டை, நீர்கடுப்பு நீக்கும்.
* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
* பொன்னாங்கன்னிக் கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
* சுக்காக்கீரை - ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு, மூலத்தைப் போக்கும்.
* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
* கல்யாண முருங்கைக் கீரை - சளி, இருமலைக் குறைக்கும்.
* வல்லாரை கீரை - மூளைக்குப் பலம் தரும், நினைவாற்றல் அதிகரிக்கும்.
* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.
* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
* புதினாக்கீரை - ரத்தத்தைச் சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.
* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
* கொடிக் காசினிக் கீரை- பித்தம் தணிக்கும்.
* சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும், பால்வினை நோயைக் குணமாக்கும்.
* பசலைக்கீரை - தசைகளைப் பலமடையச் செய்யும்.
* கொடிப்பசலைக்கீரை - வெள்ளை விலக்கும், நீர் கடுப்பை நீக்கும்.
* மஞ்சள் கரிசலை - கல்லீரலைப் பலமாக்கும், காமாலையை விலக்கும்.
* வெள்ளை கரிசலைக் கீரை- ரத்தசோகையை நீக்கும்.
* துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும், வெள்ளை மூலம் விலக்கும்.
* காரக் கொட்டிக்கீரை - மூலநோயைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
* மூக்குத் தட்டைக்கீரை - சளியை அகற்றும்.
* நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
* தும்பைக் கீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
* முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
* பருப்புக்கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
* புளிச்சக்கீரை - கல்லீரலைப் பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
* மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தைக் கரைக்கும்.
* மணத்தக்காளிக் கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
* முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
* சக்கரவர்த்திக் கீரை - தாது விருத்தியாகும்.
* வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலைப் பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
* தூதுவளைக் கீரை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
* தவசிக்கீரை - இருமலைப் போக்கும்.
* சாணக்கீரை - காயம் ஆற்றும்.
* வெள்ளைக்கீரை - தாய்ப்பாலைப் பெருக்கும்.
* விழுதிக்கீரை - பசியைத் தூண்டும்.
* துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

No comments:

Post a Comment