Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

டென்ஷனை குறைக்கும் சிறந்த ஆசனம்


நௌகாசனம் செய்முறை

* விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள்
* இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்
* மூச்சை இழுத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் உயர்த்துங்கள்.
* இரு கைவிரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். இந்நிலையில் மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
* பின் மூச்சை வெளிவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். இதுபோல் மூன்று முறைகள் காலை, மாலை செய்யுங்கள்.




பயன்கள் :

இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது. தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலையில் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும். வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

No comments:

Post a Comment