Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 27, 2020

வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை


அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்
எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும்3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு
தனிநபர் வாங்கிய எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கும் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு.
தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கு 3 மாதங்கள் EMI கட்ட கால அவகாசம்.



வீடு, வாகன கடன் வட்டி குறைப்பு, மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறைகிறது
ரிசர்வ் வங்கி சலுகைகள் அறிவிப்பு.
கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தனிநபர்கள், பொது நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.



கரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. தொழில்கள் முடக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார அளவில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்க, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment