Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 22, 2020

NCC மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! போலீஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண்


தேசிய மாணவர் படை எனும் NCC-யில் பயிற்சி பெற்றவர்களுக்கு சிஏபிஎப் காவல்துறை தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய மாணவர் படையானது (NCC) பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த தேசிய மாணவர் படையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்குக் காவல் துறை, ராணுவத்தில் சேர சிறப்பு மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம்.



தற்போது, என்சிசி-யில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, CAPF பாராமிலிட்டரியில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணிக்கான தேர்வில் இனி என்சிசி மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, CAPF தேர்வில் NCC 'C' சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மொத்த மதிப்பெணில் 5 சதவிகிதம் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். NCC 'B' சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 3 சதவிகிதம் மதிப்பெண்ணும், NCC 'A' சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 2 சதவிகிதம் மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment