Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 5, 2020

ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும் !!



உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் மக்களின் மனதில் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது தான் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றாமல் இருப்பது அரசுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது.
இதனால் இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 14ம் தேதிக்கு பிறகும் தமிழக மக்கள் ஊரடங்கு சந்திக்க நேரிடும் என்று தெரியவருகிறது.
மேலும் அதன் பிறகும் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment