Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 3, 2014

துளிப்பாக்கள்



துளிப்பாக்கள்

G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in

காதில் ஊஞ்சல் கட்டி
உல்லாமசாய் ஆடும்
லோலாக்கு.

புருவச் சிறகால்
பறக்கும் பறவை
பொட்டு.

காசு கொடுத்தால்
கடத்திச் செல்லும்
பேருந்து.

பலநாள் தோண்டியும்
ஆழமே ஆகலை
ஏரிவேலை.

யானைபோல் உருவம் கொண்டும்
அசையவே இல்லை
மலை

காலக்காற்றில்
கறையும் கற்பூரம்
ஆயுள்.

கடின உருவத்தில்
மென்மையான மனம்
பலாசுளை.

குடிக்க நீரில்லை
நிரம்பி வழிந்தது குளம்
ஏரிவேலை.

எத்தனை உதடுகள் தொட்டனவோ
என்னையும் முத்தமிடுகிறது
தேனீர் கோப்பை.

தூண்டில் இல்லாமல்
மாட்டிக்கொண்டது மனம்
காதல்.