Breaking

Tuesday, March 19, 2024

Tuesday, March 19, 2024

1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை

பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DEE - Ennum Ezhuthum April Exam Instructions - Download here
Tuesday, March 19, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (19.03.2024) இன்றைய பலன்கள்



மேஷம்:

இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.
உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:

இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:

இன்று மிகவும் நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். பணவரத்து தாமதமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:

இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:

இன்று எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:

இன்று வீண்செலவு காரிய தடை ஏற்படும். எனினும் முயற்ச்சித்தால் செல்வ சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் செல்ல நேரிடும். சொந்த பந்தங்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:

இன்று வியாபாரம் தொடர்பான செலவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். உத்தியோகம் நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:

இன்று சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:

இன்று உடல் உழைப்பு அதிகமாகும். புதுதெம்பும் உற்சாகமும் உண்டாகும். புதிய பதவி தேடிவரும். பண கஷ்டம் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எனினும் யோகமான பலன்கள் நடைபெறும். எதிர்ப்புகள் விலகும் தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:

இன்று சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:

இன்று வாழ்க்கைதுணை அனுகூலமாக இருப்பார். மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை. உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:

இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். செலவு அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
Tuesday, March 19, 2024

மார்ச் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை... மாவட்ட கலெக்டர் திடீர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில், ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆழித்தேரோட்டம் அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டது. பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என ஆகம விதியாக கருதப்படுகிறது.


அந்த வகையில் மார்ச் 21ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களில் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேயப்பட்டது. 7500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
தேரின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மரங்கள், துணி, அலங்காரப் பொருட்கள், குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தில் தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். தேர்வடக்கயிறு 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா இவைகளைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது எனக் கூற இயலாது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை உடையது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.


மார்ச் 21ம் தேதியன்று ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்காக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இந்த 4 மாட வீதிகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tuesday, March 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.03.2024

தாய்லாந்து
   




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.


விளக்கம்:

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.

பழமொழி :

Prevention is better than cure

வருமுன் காப்பதே சிறந்ததே

இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே

பொது அறிவு : 

1. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து 

2. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? 

வைட்டமின் C

English words & meanings :

 Ubiquitous - Omnipresent;   எங்கும் நிறைந்தது.
Unbiased - fair; பாரபட்சமற்ற.

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை: உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.

நீதிக்கதை

 தீவினை அச்சம்

தீய செயல்களைச் செய்வதற்குப் பயப்படுதல்

ஆலமரத்தில் இருக்கும் பறவையைக் கொல்லும் பொருட்டு வேடன் குறிபார்த்துத் தன் வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றான். மேலே பார்த்துக்கொண்டே வந்ததால் கீழே புற்று உள்ளதை அறியாமல் புற்றின்மேல் காலை வைத்து அழுத்தினான். அழுத்தியதனால் புற்று மண் இடிந்து உள்ளே உள்ள நாகத்தின்மேல் விழுந்தது. மண் விழுந்ததும் நாகம் சீறி மேலெழும்பிப் புற்றில் கால்வைத்திருந்த வேடனைத் தீண்டியது. நாகம் தீண்டியதை அறிந்த வேடன், "நாம் அப்பறவையைக் கொல்ல, வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றோம்; அம்முயற்சியாகிய தீய செயலே, 'தன் நிழல் தன்னை விடாது' என்ற முதுமொழிப்படி நம்மை நாகமாக வந்து தீண்டியது" என்று தான் செய்த தீமைக்கு வருந்தி இறந்தான். இதை வள்ளுவரும் தீய காரியங்களைச் செய்தவர் கெடுதல் அவர் நிழல் அவர் பாதத்தை விட்டு விலகாமல் அவர் பாதத்திலே தங்கியிருப்பதைப் போலாகும் என்று கூறியுள்ளார்.

இன்றைய செய்திகள்

19.03.2024


*தேர்தல் நடத்தை நெறிமுறை: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல வேண்டும்- ராதாகிருஷ்ணன்

*ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி; 88% வாக்குகள் பெற்றார்.

*எகிப்துக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகை; ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

*2வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

 *Election code of conduct: Public should carry money with proper documents- Radhakrishnan

 *Putin won in the Russian presidential election;  He got 88% of the votes.

 *US$8 billion given as aid to Egypt;  EU Declared.

 *Royal Challengers Bangalore team won the title of "Champions" in the 2nd Women's Premier League 20 Overs Cricket Tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, March 18, 2024

Monday, March 18, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்; தேதி மாற்றி அறிவித்த தேர்வுகள் துறை

பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்வுகளை 2023- 24ஆம் கல்வி ஆண்டில் எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு) மார்ச் 20 முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 15 தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பெறுவது எப்படி?

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்ய வேண்டும். பள்ளிகள்‌ தங்களது யூசர் ஐடி மற்றும்‌ PASSWORD ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

பெயர்ப் பட்டியலில்‌ திருத்தம் செய்ய இன்றே கடைசி

மேலும்‌, மார்ச்‌/ ஏப்ரல்‌ 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியலில்‌ பள்ளி மாணவ / மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள்‌ ஏதுமிருப்பின்‌ திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்ப் பட்டியலில்‌ உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்‌ / முதல்வர்களிடம்‌ அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் பிப்ரவரி 24 முதல் ஹால் டிக்கெட் எனப்படும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்தனர். இதற்கிடையில், மாணவர்கள் மார்ச் 15 முதல் ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. பிறகு மார்ச் 20ஆம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு தேதிகள் இவைதான்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 அன்று செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. இவர்களுக்கு 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

குறிப்பாக மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.


ஏப்ரல் 1ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி விருப்ப மொழி பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கடைசியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/
Monday, March 18, 2024

தலைமை ஆசிரியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் தலைமை ஆசிரியர்களுக்கான (31-40 தொகுதி) பயிற்சி முகாம், இன்று (மார்ச் 18) தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதி வரை மதுரையில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Monday, March 18, 2024

முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - GO NO : 189 , DATE : 12.07.2010


முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு...

GO NO : 189 , DATE : 12.07.2010 - Download here
Monday, March 18, 2024

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List


மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...

வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது...

தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 64 வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது...

* தொடக்கப் பள்ளி = 15+1= 16 (10%of RTE ACT)

* நடுநிலைப் பள்ளி = 64+1=65 (25% OF RTE ACT)

மாணவர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...

Merging School List - Download here
Monday, March 18, 2024

வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்.!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது.

இந்த பொது தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது .

18-வது பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 13-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 20 ஆம் தேதி ஐந்தாம் கட்டவாக்கு பதிவும் 25ஆம் தேதி ஆறாம் கட்டவாக்கு பதிவும் நடைபெறுகிறது. ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இறுதி மற்றும் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களின் பதவிக்காலம் ஜூன் இரண்டாம் தேதியோடு முடிவடைய இருப்பதால் 4-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்கிய எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Monday, March 18, 2024

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 20 வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 20-ம் தேதி வரை என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,2024-25 கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கிஉள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 20-ம்தேதிக்குள் செய்ய வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 18, 2024

நீட், ஜே.இ.இ தேர்வு தேதிகளில் மாற்றமா? என்.டி.ஏ விளக்கம்

மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும் நிலையில், JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு மற்றும் நீட் (NEET UG 2024) தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

No change in exam schedule of JEE Main, NEET UG; CUET yet to be decided

முன்னதாக வெளியிடப்பட்ட காலண்டரின்படி, கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை 2024 அமர்வு 2 ஏப்ரல் 4 முதல் 15 வரை நடத்தப்படும். அதேநேரம் JEE முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டது, ஆனால் அறியப்படாத காரணங்களால் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது, அதற்கான விண்ணப்ப திருத்தம் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும்.

"JEE முதன்மை அமர்வு 2 மற்றும் NEET தேர்வுகள் அட்டவணைப்படி இருக்கும் என்று indianexpress.com க்கு தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், CUET தேர்வு அட்டவணை விண்ணப்பப் பதிவு முடிந்ததும் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் அட்டவணையின்படி தேர்வை நடத்த முயற்சிப்போம்,' என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி கூறினார்.

அசல் அட்டவணையின்படி, இந்த ஆண்டு, CUET UG 2024 தேர்வு மே 15 முதல் 31, 2024 வரை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றும் கடைசி தேர்வு முடிந்த மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு நகர அறிவிப்பு ஏப்ரல் 30 முதல் வெளியிடப்படும், மேலும் அட்மிட் கார்டுகள் மே 2024 இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.

யு.ஜி.சி தலைவர் எம் ஜகதேஷ் குமார் இது குறித்த தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், CA மே மாத தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) விரைவில் வெளியிடவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ காலண்டரின்படி, சி.ஏ அடிப்படை பாடத் தேர்வு ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 

இடைநிலை குரூப் 1 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படும். சி.ஏ ஆகுவதற்கான கடைசி படியான சி.ஏ இறுதித் தேர்வு, மே 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் குரூப் 1, மற்றும் குரூப் 2 தேர்வு மே 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். திருத்தப்பட்ட அட்டவணை மார்ச் 19 மாலை வெளியிடப்படும்
Monday, March 18, 2024

உங்களுக்கான வாக்குச் சாவடியைச் சரிபார்ப்பது எப்படி? முழு விவரங்கள்

நாடு முழுவதும் தேர்தல் சீசன் களைக்கட்ட தொடங்கி உள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்.

மக்களவைத் தேர்தல் அட்டவணையைத் தவிர, மே 13 ம் தேதி நடைபெறும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மற்றும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு முன்னதாக, ஒவ்வொரு வாக்காளரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க..


வாக்களிக்க தேவையான ஆவணங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கு தேவையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்லலாம்.

வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
கடவுச்சீட்டு
ஆதார் அட்டை
பான் கார்டு
MNREGA வேலை அட்டை
NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
ஸ்டேட் வங்கி அல்லது தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
மத்திய/மாநில ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
அரசு/PSU/பொது வரையறுக்கப்பட்ட நிறுவனம்
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டுகள்
எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது?

பின்வரும் படிநிலைகள் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம்:

https: electoralsearch.eci.gov.in க்குச் செல்லவும்
உங்கள் மாநிலத்தை உள்ளிட்டு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
விவரங்களை நிரப்பவும் - பெயர், குடும்பப்பெயர், பிறந்த தேதி, பாலினம்
உங்கள் மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும்
கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்
உங்கள் வாக்குச் சாவடியை எப்படிக் கண்டுபிடிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறியலாம்:

https: electoralsearch.eci.gov.in இணையதளத்தைப் பார்வையிடவும்
உங்கள் வாக்குச் சாவடியைச் சரிபார்க்க மூன்று வழிகளைக் காண்பீர்கள்.


i) உங்கள் மாநிலத்தை உள்ளிட்டு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

ii) விவரங்களை நிரப்பவும் - பெயர், குடும்பப்பெயர், பிறந்த தேதி, பாலினம்

iii) உங்கள் மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும்

iv) கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்யவும்

காவியம்/வாக்காளர் அடையாள அட்டை மூலம் தேடவும்

a) மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

b) உங்கள் EPIC எண்/வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை நிரப்பவும்

c) மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஈ) கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்

மொபைல் மூலம் தேடவும்

மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்
மொழியை தேர்ந்தெடுங்கள்
மொபைல் எண்ணை நிரப்பவும்
உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிடவும்
கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்.
Monday, March 18, 2024

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன.

இந்த ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும். அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது.

அதற்கேற்ப மொத்தம் 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இதன்மூலம் 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உபரியாக உள்ளஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணிநிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, March 18, 2024

மத்திய அரசில் 2157 பணியிடங்கள். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 18 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Monday, March 18, 2024

ஆய்வக உதவியாளருக்கு 5,907 பணியிடங்கள்.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன.

இந்த ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும்.

அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது. அதற்கேற்ப மொத்தம் 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இதன்மூலம் 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உபரியாக உள்ளஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணிநிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 18, 2024

நவோதயா பள்ளிகளில் பல்துறை காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு - 10ஆம் வகுப்பு to டிகிரி வரை முடிதவர்கள் விண்ணபிக்கலாம்

மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1,377 Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:


* நர்ஸ் பணிக்கு 121 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி நர்சிங் முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

* அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் டிகிரி முடித்து 23 வயது முதல் 33 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.35,400 - ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஆடிட் அசிஸ்டென்ட் பிரிவில் 12 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. பிகாம் முடித்து 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 3 ஆண்டு அக்கவுண்ட் பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஜுனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஹிந்தி, ஆங்கிலத்தில் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் அல்லது மாஸ்டர் டிகிரியில் ஹிந்தி, ஆங்கிலத்தை பாடமாக படித்து 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* லீகல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சட்டப்படிப்பை முடித்து வழக்குகளில் வாதாடும் அனுபவம் கொண்ட 23 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

* ஸ்டெனோகிராபர் பணிக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு முடித்து ஆங்கிலம், ஹிந்தியில் டைப்பிங் தெரிந்து 18 முதல் 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஐடி முடித்து 18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* கேட்டரிங் சூப்பர்வைசர் பணிக்கு 78 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பட்டப்படிப்பை ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது 10 ஆண்டு ராணுவ துறையில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றிய சான்று பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்பட உள்ளது.

* ஜுனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் பணிக்கு 381 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு முடித்து நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள் ஹிந்தியில் நிமிடத்துக்கு 25 வார்த்தைகளும் டைப் செய்யும் திறமை கொண்டிருப்பவர்கள் விண்பணப்ம் செய்யலாம். இல்லாவிட்டால் 12ம் வகுப்பு முடித்து செக்ரட்டரியல் பிராக்டிசஸ் மற்றும் ஆபிஸ் மேனஜ்மென்ட் முடித்து 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.

* எலக்ட்ரிஷியன் அண்ட் பிளம்பர் பணிக்கு 128 தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து ஐடிஐடியில் எலக்ட்ரிஷியன், வயர்மேன் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்ட 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.

* லேப் அட்டென்டன்ட் பணிக்கு 161 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ லேபோராட்டரி டெக்னிக் அல்லது 12ம் வகுப்பில் Science Stream பாடப்பிரிவுகளுடன் படித்து முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* மெஸ் ஹெல்பர் பணிக்கு 442 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 வகுப்பு முடித்த 30 வயதுக்கு உள்ளானவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 வகுப்பு முடித்த 30 வயதுக்கு உள்ளானவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

* இப்படி மொத்தம் 13 பிரிவுகளில் 1,377 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது அளிக்கப்பட உள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Navodaya.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Monday, March 18, 2024

IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது!

ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு ரூ .500000 / - லட்சம் மிகாமலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலே உறுதி செய்து பட்டியலினை சமர்பிக்குபடி குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் நேர்வில் பிடித்தம் செய்யப்பட்ட மிகை தொகையானது தொடர்புடைய GPF பணியாளரின் வருடாந்திர Account Slip -ல் வரவு வைப்பதிற்கு பதிலாக Suspense Account- ல் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.
Monday, March 18, 2024

ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது.

ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த மாதம், 28ல் முடிகிறது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது.

வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. 

இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், இன்றுஅல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, March 18, 2024

லோக்சபா தேர்தல்: வாக்காளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்!

நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பு.. லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளதால், அரசியல் கட்சிகளில் பதற்றம் துவங்கியுள்ளது.

இந்நிலையில், தங்கள் தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் விவரங்களை அறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

அதில், வேட்பாளர்களின் சுயவிவரத்துடன், அவர் மற்றும் அவர் மீதான பல்வேறு வழக்குகள் மற்றும் குற்றவியல் வரலாற்றை இந்த செயலி மூலம் அறிய முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இது லோக்சபா தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு முன்பே அவர் இந்த செயலியை வெளியிட்டார்.


‘உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)’ என்ற இந்த ஆப்ஸ் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ் குமார் கூறினார்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது என்றார். வேட்பாளர்களின் குற்ற வரலாறு குறித்த விவரங்களை அறிந்துகொள்வதன் மூலம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் வாக்காளர் தெளிவு பெறுவதுடன், சரியான வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.