Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 5, 2016

இதய அடைப்பை நீக்கும் இஞ்சி


இதய அடைப்பை நீக்கும் இஞ்சி

இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டை கம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவ உணவு தயாரிக்கும்போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள்.

நாள்தோறும் இஞ்சி துவையல் சாப்பிட்டு வந்தால் வாத பித்த கப நோய்களைப் போக்கும். இடுப்பு, முழங்கால் வலிகளை நிவர்த்தி செய்யும். இஞ்சிசாற்றுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட்டு வர இருமல் குறையும். தலை வலியுள்ளவர்கள் இஞ்சியை தண்ணீர்விட்டு உரசி தலையில் பற்றுபோட தலை வலி நீங்கும்.

இஞ்சிச்சாறு மாதுளம்பூச்சாறு தேன் ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து வேளைக்கு 35மிலி வீதம் குடித்துவந்தால் ஈளை, இருமல் சாந்தியாகும். இஞ்சி, திரிகடுகு, ஏலம், அதிமதுரம், சீரகம் சந்தனத்தூள் வகைக்கு 4 கிராம் அளவில் சிதைத்து 1400 மிலி தண்ணீரில் போட்டு காய்ச்சி 130 மிலி அளவில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 வேளை சாப்பிட பித்தம் சாந்தியாகும்.

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறப் போட்டு ஒரு நாள் சென்று மறுநாள் அதில் ஒரு துண்டு வீதம் 48 நாள்கள் சாப்பிட, இதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி நலம் பெறலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சி சாறும் கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் கட்டுப்படும். இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊறவைத்து நாள்தோறும் கற்ப முறைப்படி உட்கொண்டு வந்தால் நரை திரை நீங்கி நீண்டநாள் வாழலாம்.