Breaking

Friday, March 17, 2017

குடியரசு தினக் கொண்டாட்டம்


குடியரசு தினக் கொண்டாட்டம்



புவியாண்ட மன்னவர் பிளவுபட்டுக் கிடந்ததால்

               தொழில்செய்ய வந்தவர் நாடாளத் தொடங்கினர்

புவிமாந்தர் அனைவரும் ஒன்றுசேர்ந்த புரட்சியால்

               சுரண்டினது போதுமே என்றவர்கள் ஓடினர்


குடியரசு என்பது குடிமக்கள் ஆள்வது

               மன்னராட்சி முறையினை தூக்கிவீசி எறிவது

அடிமைபட்டுக் கிடந்தநாம் ஆட்சிமாற்றம் வேண்டியே

               குடிமக்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து நிறுத்தினோம்.


குடியரசு நாளிலே நாட்டுக்கு உழைத்தவர்

               சாதனைகள் புரிந்தவர் தியாகிஎன்று ஆனவர்

அடுக்கடுக்காய் விருதுகள் வாங்கிநாட்டை உயர்த்துவோர்

               அனைவருக்கும் விருதினைத் தந்தவரை வாழ்த்துவர்.



நல்லதொரு நாளிது சபதமொன்றைக் கொள்ளுவோம்

               நேர்மையினை வாழ்விலே கடைபிடிக்க முயலுவோம்

கல்விகற்கும் நாமெலாம் கல்வியுடன் கலைபல

               கற்றுநாட்டை உயர்த்துவோம் பேருபெற்று வாழுவோம்.