Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 25, 2017

All India Level TET Exam - Announcement Soon?


இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்


      ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ்  உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளிகல்வி செயலாளர்
மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஒரு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் மத்திய பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை செயலாளர் அணில் ஸ்வரூப் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
தகுதித்தேர்வு
ஆசிரியராக வர விரும்பும்  பெண்கள், ஆண்களுக்காக மத்திய அரசு சார்பில் மதிப்பீடு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சி.ஏ.டி. அல்லது எஸ்.ஏ.டி. தேர்வு போன்று இது இருக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுக்கான அடித்தளமாக உருவாக்க இருக்கிறோம்.

ஆலோசனை
இந்த தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகும் பெண்கள், ஆண்களுக்கு ஆசிரியராவதற்கான ஒரு தகுதி கிடைக்கும். இது குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த திட்டத்தை அந்தந்த மாநிலங்கள் விருப்பம் போல் செயல்படுத்த உரிமை உண்டு.  இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடத்திலும் பேச்சு நடத்தியபின், பணியமர்த்தும் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

சோதனை திட்டம்
ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் வருகை உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்காக ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட, பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக சட்டீஸ்கரில்கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன்.
சட்டீஸ்கரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. ஆசிரியர்களின் வருகைபதிவேடு ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் அது சம்பள கணக்குடன் இணைக்கப்படும்.

பி.எட்.கல்லூரிகள்
பி.எட். கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், 40 சதவீதம் கல்லூரிகளை நாங்கள் தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கறோம். இது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு 40 சதவீத கல்லூரிகள் இன்னும் பதில்அளிக்கவில்ைல. உள்கட்டமைப்பு விதிமுறைப்படி இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.