Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 16, 2017

முதுநிலை வேளாண் படிப்பு; இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதில், முதுகலை பட்டப்படிப்பில், 33 துறைகளிலும், முனைவர் பட்டப் படிப்பில், 27 துறைகளிலும், ஒருகிணைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பில், நான்கு துறைகளிலும், பகுதிநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பில், 28 துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய கல்லுாரிகளுக்கு,www.tnau.ac.in என்ற பல்கலை இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர்க்கு 1,000 ரூபாயும், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு, 500 ரூபாயும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து, தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து, 'முதன்மையர், முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 03' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முதுகைலைபட்டமேற்படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூலை, 14ம் தேதிக்குள்ளும், முனைவர் பட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 17 தேதிக்குள்ளும் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். நுழைவு தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும், இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.