Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 21, 2017

அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக்றிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


சென்னை: அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான, விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 2ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வில், 16 வகை பாடங்கள் இடம் பெற்றன.அதற்கான, தோராய விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. விடைக்குறிப்பில் தவறுகள் இருந்தால், அதற்கான ஆதாரத்துடன், வரும், 25ம் தேதிக்குள் தேர்வர்கள் கடிதம் அனுப்பலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.