Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 1, 2017

PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.



தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும். மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8-ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.