Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 3, 2017

கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்*


சென்னை: நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு சேருவதற்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று முதல்  தொடங்கியது. நெட் தேர்வை சிஎபிஎஸ்ஐ (மத்திய இடை நிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த தேர்வுக்கு ஆகஸ்ட்30ம் தேதி வரை  www.cbsenet.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதி  நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் நெட் தேர்வு நடைபெறுகிறது.  ஜூனியர் ஆராய்ச்சியாளர் (junior research fellowship)  நெட் தேர்வு எழுதியவர்களில் முதல் 14 சதவீதம் பேர் தகுதி பெற்று வந்த நிலையில், இந்தாண்டு 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நெட் தேர்வில்  முதல் 6 சதவீதம் பெற்ற மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளராக பணியில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.