Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 20, 2017

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு


'தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை கிடைக்கும், தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவில், நவ., முதல் வாரம் நடக்கிறது. தற்போது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நாளை முதல், செப்., 1க்குள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.