Breaking

Thursday, August 31, 2017

DRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்


ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌


ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, 20 பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்நிலையத்தில் காணாமல் போனதற்கான சான்றுபெற்று உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. அதனால், ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்று பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.