Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 26, 2017

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்!!


புதுடில்லி: மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை, 50 கோடி பேர், தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிமையான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.ஆன் - லைனில் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே சென்று, ஆதார் எண்ணை இணைக்கும் வசதி செய்யப்பட உள்ளது. தங்களுடைய மொபைலில் இருந்தே, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை ரகசிய குறியீட்டைப் பெற்று பதிவு செய்யும் வசதி போன்ற வசதிகள், செயல்படுத்தப்பட உள்ளன.