Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 29, 2018

ஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முடியும் வரை ரத்து


பொதுத் தேர்வு முடியும் வரை ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன.இந்த ஆண்டுக் கான பொதுத் தேர்வு, பிளஸ் 2வுக்கு, மார்ச் 1; பிளஸ் 1க்கு, மார்ச் 7ல் துவங்குகிறது; 10ம்வகுப்புக்கு, மார்ச், 16ல் துவங்க உள்ளது.பொதுத் தேர்வுகளுக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ளதால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தினமும் காலையில், ஒருமணி நேரம், சிறு தேர்வும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள்கட்டுப்பாடு விதித்துஉள்ளனர்.'பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுக்கானமுன் தயாரிப்பு இருப்பதால், மாணவர்கள், சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் பள்ளிக்கு வந்து, ஒத்துழைப்பு தர வேண்டும்; இதற்கு, பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்' என, பள்ளி முதல்வர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.