Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 1, 2018

மலச்சிக்கல் குறையணுமா?







 நாம சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என பயணம் செய்து, தன் கிட்ட இருக்க சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கிட்டு, சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலோட வேலை. சில நேரங்கள்-ல அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.



திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.
அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.
எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது. உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்யலாம். இவையும் பலனளிக்காவிட்டால், உங்கள் மருத்துவர் மருந்து அல்லது அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கலாம்